புரட்சித்தாய் சின்னம்மாவிடம் காஞ்சிபுரம் நெசவாளர்கள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏழை நெசவாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுறவுத் துறையில் கைத்தறி துணிகள் நெய்து கொடுத்த நெசவாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததால் அவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் இன்று நெசவாளர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி எடுத்துக் கூறினார்கள். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தாங்கள் செய்த பணிக்கு ஊதியம் கிடைக்காமல் நெசவாளர்கள் ஏராளமானோர் துன்பப்படுவதாகவும், அவர்களின் இன்னலைப் போக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். நெசவாளர்களின் துயர்த்துடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார்.

Night
Day