எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், வரும் 7ம் தேதி, வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம், இதற்கான அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், காசவளநாடு கோவிலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் மார்ச் மாதம் 7ம் தேதி, வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை போயஸ் கார்டனில், கோயில் நிர்வாகிகள், நேரில் சந்தித்து இதற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.
திருக்கோவிலுக்கு தேர் ஒன்று வேண்டும் என்றும், அதற்கு ஆவன செய்யுமாறு, புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கோரிக்கை வைத்ததாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டிய பட்டாடைகளை, காசவளநாட்டார்கள், விளார் சங்கர், அமரேசன், காசிநாதன், ரவி, அகிலன், சம்பந்தம், திருமாவளவன், சுரேஷ், கோபி, சுவாமிநாதன் ஆகியோரிடம் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்.