எழுத்தின் அளவு: அ+ அ- அ
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக மதுரை சென்ற அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 77ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள, P.M.T. கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இந்த விழாவில், கலந்து கொள்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் இருந்து கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேற்று பிற்பகல் புறப்பட்டார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.