புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அங்காங்கே நீர் மோர் பந்தலை திறக்க கழக நிர்வாகிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பள்ளிப்பட்டு அடுத்த புது கீச்சலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் எம்.எல்.ஏ பி.எம்.நரசிம்மன் திறந்து வைத்தார். தொடர்ந்து இளநீர், தர்பூசணி, மோர் மற்றும் அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் இ.எம்.எஸ்.நடராஜன், ஜெகன், வேணு, பேராசிரியர் கோ.ரஜினி, மோகன் ராஜு குப்பையா, மாவட்ட இளைஞரணியை சேர்ந்த சசிகுமார், வழக்கறிஞர்கள் வேலு மற்றும் புருஷோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Night
Day