புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு எதிரொலி - நெல்லையில் குவாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தின் போது, நெல்லை மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகமாக கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்பாக பேசியதை அடுத்து 10 டயருக்கு அதிகமான லாரிகளில் கனிம வளங்களை ஏற்றி சென்றால், சம்பந்தப்பட்ட குவாரிகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நெல்லை மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, பல்வேறு இடங்களில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும், மிகப்பெரிய லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும் அப்போது புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து அதிகமான கனிம வளங்களை லாரிகளில் ஏற்றி சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது புரட்சித்தாய் சின்னம்மா, மக்கள் பயணத்தின் போது மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசியதால் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் பகுதி வழியாக 10 டயருக்கு அதிகமான லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டால் உடனடியாக 97865 66111 என்ற தொலைபேசி எண்ணுக்கு, புகைப்படம் எடுத்து அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதையும் மீறி லாரிகள் வந்தால் சம்பந்தப்பட்ட கல்குவாரிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்‍கை கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என நெல்லை மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


Night
Day