புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு... செயல்பட தொடங்கிய விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் அரசு நிலத்தை அடமானம் வைத்து, AMRL நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டியதுடன், அத்திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதன் எதிரொலியாக, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆறு மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அம்மாவின் வழியில் மக்‍கள் பயணத்தை தொடங்கினார். அதன் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொழிற்பூங்கா அமைப்பதற்காக, சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதன் பிறகு இந்தப் பகுதிக்கு பெரிய அளவில் தொழிற்சாலைகளை கொண்டு வர திமுக அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார். AMRL என்ற நிறுவனத்துடன் தொழில் தொடங்க ஒப்பந்தம் போட்டதாக கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, ஆனால் பெரிய அளவில் யாரும் தொழில் தொடங்க வராத காரணத்தினால், அரசின் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை வேறொரு நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளதாகவும், அந்த தனியார் நிறுவனம் அரசின் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து, ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்ததாகவும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும், வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் புரட்சித்தாய் சின்னம்மா தோலுரித்து காட்டினார்.

இதனிடையே, புரட்சித்தாய் சின்னம்மா முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா விரிவாக்க பணிக்காக ஏ.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்தது. மேலும், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா விரிவாக்கத்திற்காக ஏ.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் ஒப்படைத்த 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆறு மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 துறைகள் சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழில்துறை செயலாளரிடம் பேசியதாகவும், அங்கு இருக்கும் பிரச்சனைகள் ஆறு மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என துணை செயலாளர் தெரிவித்ததாகவும் கூறினார்.

Night
Day