புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் நடைபெற்ற புரட்சித்தலைவி பிறந்தநாள் விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் உள்ள P.M.T  கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மதுரையில் உள்ள, ஹோட்டலில் இருந்து, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திரளான கழகத் தொண்டர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, பொன்னாடைகள், புத்தகங்கள் மற்றும் பூங்கொத்துக்கள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

'புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க' என கழகத் தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி, சின்னம்மாவை வரவேற்றனர்.

உசிலம்பட்டி செல்லும் வழியில் குழந்தைகளைப் பார்த்த புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு தாயுள்ளத்துடன் சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார்.

மதுரையில் இருந்து, உசிலம்பட்டி செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, மதுரை காளவாசல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மேள, தாளங்கள் மற்றும் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு திரளான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

உசிலம்பட்டி செல்லும் வழியில் கோச்சடை பகுதியில் இஸ்லாமிய பெண்கள் குடும்பத்துடன் வந்து புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்தனர். அவர்களுடன் சின்னம்மா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சின்னம்மாவுடன்,  இஸ்லாமிய பெண்கள் ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வழியில், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரளான பெண்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர்.

சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள், புரட்சித் தாய் சின்னமாவை பார்த்ததும் உற்சாகமடைந்தனர். மாணவிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்கள் வழங்கி, மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

செக்கானூரணி செல்லும் வழியில் ஒரு தாய், தனது குழந்தையுடன் வந்து புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து தனது குழந்தை படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை கனிவோடு கேட்டுக் கொண்ட சின்னம்மா உரிய உதவி செய்வதாக தெரிவித்தார்.

செக்கானூரணி செல்லும் வழியில் ஆட்டோ தொழிலாளர்கள் சின்னம்மாவுக்கு எலுமிச்சை பழம் வழங்கி, அஇஅதிமுகவை ஒன்றிணைத்து வரும் 2026ல் சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

செக்கானூரணி பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்தும் மலர்கள் தூவியும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
அஇஅதிமுக என்றால் பெண்கள் படைதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பெண்கள், புரட்சித் தாய் சின்னம்மாவை எழுச்சி பொங்க வரவேற்றனர்.

செக்கானூரணியில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கருமாத்தூர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'சின்னம்மா வாழ்க' என வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். கழகத் தொண்டர்கள் சின்னம்மாவுக்கு மாலைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்தில் புரட்சித்தாய் சின்னம்மா கையொப்பமிட்டு வழங்கினார். கழகத் தொண்டர்களும் பெண்களும் சின்னம்மாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

செல்லம்பட்டி பகுதிக்கு வந்த சின்னம்மாவுக்கு ஏராளமான பெண்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

வாலாந்தூர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பெண்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உசிலம்பட்டியில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார் புரட்சித்தாய் சின்னம்மா. செண்டை மேளங்கள் முழங்க புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அஇஅதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும், கழகம் ஒன்றிணைந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளையொட்டி, ஏழை, எளியோர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலருக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை சின்னம்மா வழங்கினார்.
 
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று தாரக மந்திரத்துடன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அரும்பாடுபட்டு உழைத்த, புரட்சித்தலைவி அம்மாவின் 77வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் P.M.T. கல்லூரி அருகில் அமைக்கப்பட்ட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் உசிலம்பட்டி பகுதி மக்கள் அஇஅதிமுகவுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். 

கழகம் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தொடர்ந்து மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து எடுத்துக்கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, கழகம் ஒன்றுபட்டு, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏழை எளியோர், மாணவ மாணவிகள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கு ஏராளமாள நலத்திட்ட உதவிகளை இந்நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், மிதிவண்டிகள், ஆகியவற்றை புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்.

மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா.

புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள், செங்கோல், மாலை மற்றும் சூலம் வழங்கி கழகத் தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

உசிலம்பட்டி கோட்டையூரை சேர்ந்த சிவா, கௌசல்யாதேவி தம்பதியினரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என புரட்சித் தாய் சின்னம்மா பெயர் சூட்டினார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, விழா மேடையில், கழகத் தொண்டர்கள் வெற்றிலை மாலை அணிவித்தனர்.

விழாவில் முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய்  சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
 
புரட்சித்தலைவி அம்மா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மதுரையில் தங்கியிருந்தார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆப்பநாடு மறவர் சங்கத்தின்   தலைவர் டாக்டர் ராம்குமார், செயலாளர் குணசேகர பாண்டியன், உயர் மட்டக் குழு நிர்வாகிகள் ஏனாதி மோ.தியாகராஜன் மற்றும் காசி தேவர் உள்ளிட்ட நிர்வாகிகள், கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் புரட்சித்தாய் சின்னம்மா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், பயன்பெற்ற மாணவர்களும், பயணாளிகளும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
 

Night
Day