புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல் - சபாநாயகர் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு மலர் வணிக வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்திய நிலையில், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான அப்பாவு, மலர் வணிக வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக மக்‍களின் உரிமைகளைக்‍ காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்‍களுக்‍கு தோலுரித்துக்‍ காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக்‍ காத்திடவும், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கடந்த 13ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், "அம்மாவின் வழியில் மக்‍கள் பயணம்" மேற்கொண்டார்.

இந்த பயணத்தின்போது, கடந்த 18ம் தேதி வள்ளியூரில் பொதுமக்‍கள் மத்தியில் உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, காவல்கிணறு பகுதியில் தொடங்கப்பட்ட மலர் வணிக வளாகம் தற்போது செயல்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மலர் வணிக வளாகத்தை மக்‍கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி இருந்தார்.

இதனையடுத்து, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவைத் தலைவருமான அப்பாவு, காவல்கிணறு மலர் வணிக வளாகத்தில் நேரில் ஆய்வு செய்தார். வேளாண் வணிகவரித்துறை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளுடன் திட்ட மதிப்பீடு குறித்து ஆலோசனை செய்து, விரைவில் மலர் வணிக வளாகத்தை புதுப்பித்து, ​மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.


Night
Day