எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையின் முக்கிய கால்வாய்கள் மற்றும் முகத்துவாரங்களை விளம்பர திமுக அரசு தூர்வாராததால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக குற்றம்சாட்டிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மழைக்கு முன்னரே தூர்வாரும் பணிகளை விளம்பர அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். புரட்சித்தாய் சின்னம்மாவின் வலியுறுத்தலை தொடர்ந்து, அடையாறு முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை விளம்பர திமுக அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த 17ஆம் தேதி அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர், பட்டாளத்தில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, முக்கிய கால்வாய்கள் மற்றும் முகத்துவாரங்களை விளம்பர திமுக அரசு தூர்வாராததால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மழைக்கு முன்னரே தூர்வாரும் பணிகளை விளம்பர அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
புரட்சித்தாய் சின்னம்மாவின் வலியுறுத்தலை தொடர்ந்து, ஆற்று நீர் கடலில் கலக்கும் அடையாறு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. 150 மீட்டர் அகலத்திற்கு மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு சுமார் 3 மீட்டருக்கு முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடையாறு ஆற்றிலிருந்து வரும் நீர், தங்குதடையின்றி கடலுக்குச் செல்லும் வழியில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.