புரட்சித் தாய் சின்னம்மாவிடம் வாழ்த்து பெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அவர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துகளை புன்னகையோடு ஏற்றுக்கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார். பின்னர் அனைவரும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Night
Day