புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சூப்பர் குட் சுப்பிரமணி - பண உதவி கேட்டு வீடியோ வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில், முண்டாசுப்பட்டி, கன்னி மாடம், காவல்துறை உங்கள் நண்பன், ஜெய்பீம், பிஸ்தா, பரமன் உள்பட பல படங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் தற்போது 4ம் நிலை புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தான் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும்,  மருத்துவச் செலவிற்கும், குடும்பச் செலவிற்கும் பணம் தேவையாக இருப்பதால், நண்பர்கள் உதவி செய்யுமாறு வீடியோ மூலம் கேட்டுள்ளார்.

Night
Day