பூக்கள் வரத்து குறைவால் விலை ஏற்றம் - ஒரு கிலோ மல்லி ரூ.1,700

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்தது.

தோவாளை பூ சந்தைக்கு ஓசூர், திண்டுக்கல், நிலகோட்டை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களிலிருந்து டன் கணக்கில் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. கிலோ 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஆயிரத்து 700 ரூபாயாகவும், 400 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ ஆயிரம் ரூபாயாகவும், 400 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ கிலோ 800 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. பூக்களின் விலை மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளதால் விற்பனை களைகட்டி உள்ளது.

Night
Day