எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1ம் தேதி திடீரென குண்டு வெடித்ததில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் சென்னையில் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முத்தியால்பேட்டையில் உள்ள அபுதாஹிர் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அவருடை செல்போனை பறிமுதல் செய்துவிட்டு, நாளை மறுநாள் காலை பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகக்கோரி சம்மன் வழங்கிவிட்டு சென்றனர். மேலும், லியாகத் அலி, ரஹீம் ஆகியோரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கினர்.