பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கடும் தண்டனை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா கடந்த 10-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளார்.

Night
Day