பெண்கள் இலவசப் பயணம் - ஆ.ராசா மீண்டும் சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா, காலை உணவு திட்டத்தில் என்ன உணவு வழங்குகிறார்கள் என்பதை தெரியாமல் உளறி கொட்டியதுடன், இலவச பேருந்து பயணம் குறித்தும் கொச்சையாக பேசியது சர்ச்சையாகி உள்ளது. பிரச்சாரத்தில் திமுகவினர் தொடர்ந்து அத்துமீறி பேசி வருவது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, எம்.பியும், திமுக துணைப்பொது செயலாளருமான ஆ.ராசா குன்னம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர்,  கொரோனா காலத்தில் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மயங்கி விழுந்ததால்,  பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டதாக இஷ்டத்திற்கு வார்த்தைகளை அள்ளி வீசினார். 

அது மட்டுமில்லாமல், பள்ளிகளில் காலை உணவாக என்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது கூட தெரியாமல், புளி சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம்,  சாம்பார் சாதம்  வழங்கப்படுவதாக உளறிக்கொட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா , மதிய உணவில் கொண்டு வந்த திட்டத்தினை கூறி, அதனை விளம்பர அரசின் முதல்வர் ஸ்டாலின் செய்ததாக பொய்யான தகவலை தெரிவித்தார்.

ஆ.ராசாவின் உளறல்களை கண்ட கூட்டணி கட்சியினர், இவர் பிரச்சாரத்திற்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

உளறலோடு நிறுத்திக்கொள்ளாமல், பெண்கள் குறித்து பேசிய அவர், மகளிரை பாருங்கள் காலையில் மல்லிகை பூ வாங்க வேண்டும் என்றால் டவுன் பஸ்ஸில் ஏறி தங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு சென்று வாங்கி வருவதாகவும் பெண்களை கொச்சைப் படுத்தினார்.

வீட்டுக்காரர், எங்கம்மா போற....  என்று கேட்டால் இருய்யா.... மல்லிகை பூ வாங்கி வருகிறேன் என்று கூறி இலவச பேருந்தில் பெண்கள் செல்கிறார்கள் என பேசினார்.

பேருந்திற்கு காசு கொடுக்கத்தேவையில்லை என்பதால், பூ வாங்க கூட  பெண்கள் பக்கத்து ஊருக்கு செல்கிறார்கள் என பொருள்படும்படி ஆ.ராசா பேசியது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு நிறுத்தாமல் ,  மாலை நேரத்தில்,  காத்தாட ஒரு டீ குடிப்பதற்கு கூட பெண்கள் இலவசமாக பேருந்தில் ஏறி செல்கிறார்கள் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக மற்றும் கூட்டணி கட்சினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதாலும், திமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என அனைவரும் ஆணவமாக பேசுவதும், எதுவும் தெரியாமல் உளறி கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது.

மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் அவர்களுக்கு சொற்ப அளவில் சலுகைகளை அளித்துவிட்டு, சொந்த பணத்தில் செய்தது போல் பெருமை பட்டுக்கொள்ளும் திமுகவிற்கும் இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

varient
Night
Day