பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி - வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் மற்றும் இந்து சமயம் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்து மதத்தை பற்றியும், பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.  உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day