பெரம்பலூர்: சாலையை கடக்க முயன்றவர் மீது பேருந்து மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  எசனை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது விவசாய நிலத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஆத்தூர் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். பின்னர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்து வீட்டின் சுவர் மீது இடித்து நின்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஓட்டுநரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

varient
Night
Day