பெரியார் பல்கலை. துணை வேந்தரின் ஜாமினை ரத்து செய்யக் கோரி வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி சேலம் காவல்துறை தொடர்ந்த வழக்கை, வரும் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, காவல்துறை பதிவுசெய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிறப்பித்த உத்தரவு குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

varient
Night
Day