எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்களின் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாளில், அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்து, அவர்தம் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா
வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்களின் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாளில்,
அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்து, அவர்தம் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எளிய தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார் என்று சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார் என்றும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்திலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் எனவும்
புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமையை தேடித் தந்தவர் என்பதை இந்நாளில் எண்ணிப்பார்த்து பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை எந்நாளும் தொடர்ந்து பின்பற்றிட அனைவரும் உறுதி ஏற்போம் என்று புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார்.