பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பொதுமக்கள் - போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் பேருந்துகள், ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்றில் இருந்து சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை வரும் வழியில் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே செல்கின்றன. இன்றும், நாளையும் இதைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Night
Day