பொங்கல் கொண்டாட சொந்த ஊர் வந்தவருக்கு சோகம் - பள்ளத்தில் விழுந்து மகன் கண்ணெதிரே தந்தை பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, மகன் கண்ணெதிரே தந்தை உயிரிழந்தார். 

சென்னையில் குடும்பத்துடன் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வரும் சரவணன் என்பவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த கிராமமான பாரசூருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நெல்வாய் கிராமத்தில் தரைப்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த 14 வயது மகன் மோகேஷ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த சென்ற அனக்காவூர் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Night
Day