பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் - புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 56வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

தமிழ் மக்‍களின் வாழ்வில் எந்நாளும் நீக்‍கமற நிறைந்திருப்பவரும், பேச்சாற்றல், எழுத்தாற்றலால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தலைவரும் தென்னாட்டு பெர்னார்ட் ஷா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்  56வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து அறிஞர் அண்ணா நினைவுநாள் உறுதிமொழி ஏற்றுக்‍கொண்டார்.

பின்னர், புரட்சித்தாய் சின்னம்மாவுடன் இணைந்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Night
Day