பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்  ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே மாதாவரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த மர்மகும்பல் சிறுமியை வலுகட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறசது. சிறுமி கூச்சலிடவே சாலையில் சென்ற நபர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையறிந்த மர்ம கும்பல் சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்றது. சிறுமியை மீட்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Night
Day