பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் - வீடியோ வைரல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் பேருந்து குப்பை வண்டி மீது மோதியதில் தூய்மை பணியாளர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஓமலூர் அருகே உள்ள பன்னப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சித்ரா என்பவர் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரும் சத்யா என்ற தூய்மை பணியாளரும் பன்னப்பட்டி பிரிவு ரோடு அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து குப்பை வண்டி மீது மோதியதில் அருகே பணி செய்து கொண்டிருந்த சித்ரா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சித்ராவை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day