பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்க நிதியில்லை - கைவிரித்த தமிழக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்த ஆண்டு பொங்கல் பரிசு இலவச தொகுப்பில் பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்க நிதியில்லை என தமிழக அரசு கைவிரித்துள்ளது.

சட்டப்பேரவையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு ஏன் பணம் வழங்கவில்லை என உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஆயிரம் ரூபாய் ரொக்‍கம் வழங்க நிதியில்லை என தெரிவித்தார். ஒட்டுமொத்த நிதி நெருக்கடியால் தான் பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்க முடியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பொங்கல் தொகுப்புக்காக 780 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு காண்பித்தார். மத்திய அரசிடமிருந்து புயல் நிவாரண நிதி குறைவாக வந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். 

கார் பந்தயத்திற்கு வீண் செலவு செய்யும் விளம்பர அரசிடம், பொங்கல் தொகுப்புக்கு நிதி இல்லையா என பொதுமக்‍கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருகிலோ அரிசி, சர்க்‍கரை மற்றும் முழு கரும்பு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. முந்திரி, உலர் தி​ராட்சை போன்ற பல பொருட்கள் வழங்கப்படவில்லை. மாறாக பல்வேறு பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு 199 ரூபாய், 499 ரூபாய் என விலையில் விற்பனைக்‍கு அடுக்‍கி வைத்திருப்பதாக பொதுமக்‍கள் தெரிவித்தனர். ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படாதது பொதுமக்‍கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day