பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1000 ரூபாய் இடம்பெறாதது குறித்து விளம்பர திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா?  கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் விளம்பர திமுக அரசு மக்களை ஏமாற்றக் கூடாது என்று கூறிய அவர்,  மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படாத சூழலில், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்குவது அவசியம் என தெரிவித்துள்ளார். மேலும் நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை போன்ற காரணங்களைக் கூறி  மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Night
Day