பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க உயிர் பயத்தில் தலைக்கவசத்துடன் வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் பெரிய கடை வீதியில் செயல்படும் ரேஷன் கடைக்கு, தலைக்கவசம் அணிந்து வந்து பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்தளவிற்கு கடை சிதிலமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

திருப்பூர் மாநகராட்சியின் 50-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தோட்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடை மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரேஷன் கடை இயங்கி வரும் பழுதடைந்த கட்டிடத்தை புதுப்பித்து தரும்படி கூட்டுறவு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கியும், இதுவரை இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை புதுப்பிக்காமல் இருப்பதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கடைக்கு, ரேஷன் பொருட்களை உயிர் பயத்தில் பொதுமக்கள் வாங்கி செல்லும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வரிசையில் நின்ற பொதுமக்கள், பாதுகாப்பு கருதி, தலைக்கவசத்துடன் வரிசையில் நின்றிருந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. பலமுறை மனு அளித்தும் கண்ட கொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வந்த மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வரும் கர்ப்பிணிகள், முதியோர் என அனைவரும் பழுதடைந்த ரேஷன் கடையால் பாதிக்கப்படுவதாகவும், இந்த கடைக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புதிய கட்டிடத்தில் ரேஷன் கடையை மாற்ற வேண்டும் அல்லது புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பர திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைக்கு வருகை தரும் மக்கள் தலைகவசத்துடன் ரேஷன் கடைக்கு வருவதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

Night
Day