பொன்முடிக்கு ஆதரவாக திமுகவினர் நடத்திய தீக்குளிப்பு நாடகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடிக்கு ஆதரவாக திமுக தலைமையைக் கண்டித்து அக்கட்சியினர் திக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றினர். அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவெண்ணைநல்லூர் திமுக நிர்வாகிகள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அவர்களை யாரும் வந்து தடுக்க முன் வராததால், உயிருக்கு பயந்து, தீக்குளிப்பு முயற்சியை கைவிட்டு, திமுக பிரமுகர் குணா என்பவரின் இருச்சக்கர வாகனத்திற்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். இதனைத் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து திமுக தலைமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Night
Day