எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என உத்தரவிட்டது.
இருவருக்கும் 3 அண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியும், அவரது மனைவியும் சிறையில் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்தது.
இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள்,
இந்த வழக்கு தொடர்பாக வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.