பொன்முடி விடுதலைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 1996ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்குகளில் இறுதிவிசாரணை நடந்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

Night
Day