பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் படித்து 7 புள்ளி 5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதேபோல் பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கு வரும் 25ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 29ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day