போதைப்பொருள் புழக்கத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளில் திமுக அரசு விரைந்து செயல்படாமல் விழாக்கள் நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் முறைப்படி வழங்கப்படவில்லை என்றும், மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகார் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், இதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார். 

Night
Day