விளிம்புநிலை மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் சேவையாற்றிய போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பு, சேவை, இரக்கத்தினால் நிரம்பிய போப் பிரான்சிஸ்ஸின் வாழ்க்கை, நல்லதொரு உலகத்தை கட்டியெழுப்ப உலக மக்களுக்கு என்றும் வழிகாட்டியாக விளங்கும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விளிம்புநிலை மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் சேவையாற்றிய போப் பிரான்சிஸ்ஸை நினைவுகூறுவதாக தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸ்ஸின் சமூகநீதி மற்றும் சூழலியல் குறித்த முன்னெடுப்புகள், மதங்களுக்கு இடையே ஏற்படுத்திய இணக்கமான உறவு ஆகியவை உலகெங்கும் எண்ணற்ற மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
அன்பு, எளிமை, பணிவு ஆகிய பண்புகளின் உறைவிடமாக விளங்கியவர் போப் பிரான்சிஸ் என்றும், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், அகதி முகாம்களுக்கு போப் பிரான்சிஸ் மேற்கொண்ட பயணங்கள், அவரது இரக்க குணத்திற்கும், மற்றவர்களின் துயரை பகிர்ந்துகொள்ளும் பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கின என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபைக்கு அவர் எழுதிய 'லாடாடோ சி' என்ற தலைப்பிலான கடிதம், சூழலியல் குறித்த உரையாடல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும், அன்பு, சேவை, இரக்கத்தினால் நிரம்பிய போப் பிரான்சிஸ்ஸின் வாழ்க்கை, நல்லதொரு உலகத்தை கட்டியெழுப்ப உலக மக்களுக்கு என்றும் வழிகாட்டியாக விளங்கும் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.