போலி வியாபாரிகள் பட்டியலை வெளியிட்ட திருச்சி மாநகராட்சியை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருச்சி மாநகரில் தரைக்கடை வியாபாரிகளை நசுக்கும் நோக்கில் செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

வியாபாரிகள் குழு என்ற பெயரில் தரைக்கடை வியாபாரிகளை அழிக்கும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தரைக்கடை வியாபாரிகளின் உண்மையான கணக்கெடுப்பை நடத்தாமல் போலி பட்டியலை வெளியிட்டு தேர்தல் நடத்துவதை கண்டித்தும் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day