போலீஸ் இருப்பாங்க.. ஹெல்மெட் போடுங்க...! - இணையத்தில் வைரலாகி வரும் கூகுள் மேப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும் இடங்களை கூகுள் மேப்பில் குறிப்பிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். பெரும்பாலானோர் இன்றைய காலக்கட்டத்தில் கூகுள் மேப்பை பயன்படுத்தியே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கூகுள் மேப்பில் போலீசார் வாகன தணிக்கை செய்யும் இடங்களை குறிப்பிட்டு, போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்று சில இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இதேபோல் தமிழகம் முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும் இடங்களை குறிப்பிட்டால் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம் என கிண்டல் செய்து வருகின்றனர். 

Night
Day