மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில், போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று 11 மணி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

Night
Day