மக்களவை தேர்தல்: வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், சொந்த கட்சியினரே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதும் அதிகரித்துள்ளது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள், நீங்கள் யார்? எதற்காக இங்கு ஓட்டு கேட்க வருகிறீர்கள்? என்று கேட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியதால், கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரிக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள காடாம்புலியூரில் சாலையில் இருபுறமும் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்படி வரையப்பட்ட சுவர் விளம்பரத்தில் தேர்தல் நாள் 2024 ஏப்ரல் 19 என்பதற்குப் பதிலாக, 23 ஏப்ரல் 19 என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day