மக்களின் பிரச்னைகளை பேசுங்கள் - எம்.பி.க்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி, பாப்பாக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி, மேலபாப்பாக்குடி பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகைதந்த, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பாப்பாக்குடி, மேலபாப்பாக்குடி பகுதியில் பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியில் தமிழகத்தில் குடிநீர் பிரச்னை அதிகம் உள்ளதாகவும், போதிய சாலை வசதி, பேருந்து வசதி கிடையாது என்றும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாப்பாக்குடி, மேலபாப்பாக்குடியில், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழகத் தொண்டர்கள் வீரவாள் பரிசளித்தனர். 

பாப்பாக்குடி, மேலபாப்பாக்குடியில் பொதுமக்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மாவிடம், அப்பகுதி மக்கள், தங்கள் குறைகளை எடுத்துக் கூறினா். 

அப்போது அது குறித்து பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, பாப்பாக்குடி, மேலபாப்பாக்குடி பகுதியில் இரவு 11.50 மணிக்கு பொதுமக்கள் தன்னை சந்தித்து குறைகளை எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார். இங்கு பேருந்து வசதி இல்லை, சாலை வசதி இல்லை, தண்ணீர் பிரச்சனை அதிகம் உள்ளது என சொல்கிறார்கள் - பாபநாசத்தில் இருந்து முக்கூடல் வழியாக திருநெல்வேலிக்கு ஒரு பேருந்து உள்ளது - அது காலையில் 8:00 மணிக்கு மட்டும்தான் உள்ளது - அதில் பள்ளிக்குச் செல்லும்போது சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை - தாமதமாக செல்வதால் பள்ளியிலும் அனுமதிப்பதில்லை என மக்கள் கூறுகிறார்கள். இந்த அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிகளுக்குச் செல்வதற்கு ஒரு பேருந்து மட்டும்தான் உள்ளது என்கிறார்கள் - அதனையும் கவனத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 





Night
Day