மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் 15வது நாளாகவும், களக்காடு தலையணையில் 10-வது நாளாகவும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் இன்றும் 15-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பால் 10-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Night
Day