மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கவில்லை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதிமுக, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக சின்னம் ஒதுக்கபடவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் வாக்களிப்பது குறித்த விளக்க விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு 25 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ள நிலையில், கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளதாக தெரிவித்தார். மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பான உத்தரவு இதுவரை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வரவில்லை என்றும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Night
Day