எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளரான தனது தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் "வாழ்நாள் போராளி" என்ற விருது மட்டும் தான் என்று அவர் பெற்றுள்ளது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைப்பதற்கு ஒருவர் மறைமுகமாக வேலை செய்வதாக துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபருக்கு முன், கட்சியின் முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற தனக்கு விரும்பமில்லை என்று குறிப்பிட்டுள்ள துரை வைகோ, எனவே தனது கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மதிமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பதை உறுதியோடு தெரிவித்து கொள்வதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, துரை வைகோவை மதிமுக பொதுச் செயலளர் வைகோ சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை துரை வைகோ திரும்ப பெற வேண்டும் என்றும் அவரது ராஜினாமா கடிதத்தை தலைமை ஏற்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.