மதிய உணவு அருந்திய மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. 

ஓங்கூரில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளியில் வழக்கம் போல் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களில் 16க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உணவு கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, சாம்பார் சாதம் உள்ளிட்ட உணவுகள் அருகே பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day