மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய கிராம ஊராட்சி சேவை மையம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பென்ஞ்ச் மற்றும் மேஜைகளில் அமர்ந்து மதுப்பிரியர்கள் மது அருந்தும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தென்கீரனூர் கிராமத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.செந்தில்குமார் மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பென்ஞ்ச் மற்றும் மேஜைகள் கிராம ஊராட்சி சேவை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதில் அமர்ந்து மதுப்பிரியர்கள் மது அருந்தும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. 

varient
Night
Day