மதுராந்தகம் அருகே 50 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிளியாற்றில் சிக்கி கொண்ட தனியார் பேருந்திலிருந்து 50 பயணிகள் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். மதுராந்தகம் ஏரிக்கு சுமார் 8000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் உபரிநீர் அப்படியே வெளியாகி, கிளியாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பவுஞ்சூர் தச்சூர் வழியாக, செங்கல்பட்டு நோக்கி 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சகாய நகர் அருகே வெள்ள நீரில் சிக்கியது. இதில் பயணித்த பயணிகளை அப்பகுதி மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றி காப்பாற்றினர். ஆனால் பேருந்து மீட்க முடியாமல் தண்ணீரிலேயே சிக்கி கொண்டது.

Night
Day