மதுரையில் இருந்து மலேசியாவுக்கு நாளை முதல் விமான சேவை தொடக்கம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை தொடங்கியுள்ள நிலையில், மதுரையிலிருந்து சென்னை வழியாக மலேசியா விமான சேவை நாளை முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மதுரையில் இருந்து இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை உள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என மத்திய விமான அமைச்சகம் அறிவித்ததை அடுத்து இன்று முதல் மதுரை - சென்னை, சென்னை - மதுரைக்கு இரவு நேர விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் முதல்முறையாக மதுரையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை நாளை முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.

Night
Day