மதுரையில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கழிவுநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மூன்றாவது நாளாக குடியிருப்பு பகுதிக்குள் மழைநீரோடு கழிவு நீர் தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதூர், காந்திபுரம், பாண்டியன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 3ஆவது நாளாக மழை நீரோடு கழிவுநீர் தேங்கி இருப்பதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவு நீரோடு சேர்ந்த நீரில் அப்பகுதி மக்கள் நடந்து செல்வதால் குழந்தைகள், பெண்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக வேதனை தெரிவித்தனர். இதனிடையே அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு தயாரான நிலையில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீரை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Night
Day