மதுரையில் கொளுத்தும் வெயில் - மதியம் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் மதியம் 12 முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயிலின் தாக்கம் பதிவாகி வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பயணம் செல்லும்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Night
Day