எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் வழக்கறிஞரை காரில் கடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமார் மற்றும் கமுதியை சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்வேல் ஆகிய இருவரும் உறவினர்கள். ராஜ்குமாரிடம் 5 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய செந்தில்குமார், பணத்தை கொடுக்காமல் தாமதித்து வந்துள்ளார். இதையடுத்து செந்தில்குமாரை பின்தொடர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள், மதுரை ஆட்சியர் அலுலவகம் அருகே செந்தில்குமாரின் காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். காரில் இருந்து வழக்கறிஞர் செந்தில்வேல் இறங்கி தப்ப முயன்றபோது ராஜ்குமாரின் நண்பர்கள் செந்தில்வேலை அடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். இதைபார்த்த மாநகர ஆயுதப்படை காவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து காரை பின்தொடர்ந்து சென்றார். இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, செந்தில்குமாரையும் அவரது கார் ஓட்டுநரையும் மீட்டனர். விசாரணையில் செந்தில் குமார் தனது உறவினரான ராஜ்குமார் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதும், அதனை திருப்பி செலுத்த தாமதமானதால் மிரட்டி பணத்தை கேட்பதற்காக கடத்தியதும் தெரியவந்துள்ளது.