மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்கம் : 10 தளங்களுடன் 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியது. தோப்பூரில் 222 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பணிகள் தொடங்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனிடையே இன்று போர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Night
Day