எழுத்தின் அளவு: அ+ அ- அ
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக அரசைக் கண்டித்து ஏராளமான அரசு ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
திருநெல்வேலி மாவட்டம், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலத்திற்கு முன்பு நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளதாக குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல் மாவட்டம், பூங்கா சாலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 0 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு ஏமாற்றி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.